உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கள்ளில் இருக்கின்றன. கள்ளுக்கு தடைவிதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று கள்ளச்சாராயத்திற்கு பல உயிர்கள் பலியாகாமல் இருந்திருக்கும்.
பனை, ஈச்சம், தென்னை மரங்களிலிருந்து இளநீராகவோ, பதநீராகவோ, கள்ளாகவோ இறக்கி குடித்தும், விற்றும் கொள்ளலாம். இவற்றை மதிப்புக்கூட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்தி கொள்ளலாம். அரசின் தலையீடு மற்றும் குறுக்கீடு இருக்காது. அதே நேரத்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகளுடன் கள்ளுக்கான தடை நீக்கப்பட்டால், பாட்டில்கள் மற்றும் டின்களில் அவற்றை அடைத்து நட்சத்திர விடுதிகள், சர்வதேச விமான நிலையங்களில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணி அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அதிகளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. இவ்வளவு பலன்கள் இருக்கிறபோது கள்ளுக்கு ஏன் அரசு தடை விதிக்க வேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்தை மதித்து உடனே அரசு கள் தடையை நீக்க வேண்டும். கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். மக்கள் செம்மறி ஆடுகளாய் இருக்கின்ற வரையில் ஆட்சியாளர்கள் ஓநாய்களாய்த்தான் இருப்பார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.