எனவே, 140 கோடி மக்களின் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு, அனைவரின் சம்மதத்துடன், அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதற்கான நிலையான முயற்சிகளை எங்கள் அரசு மேற்கொள்ளும். அரசியலமைப்பின் புனிதத்தைப் பேணுவதன் மூலம், அனைவரையும் ஒன்றிணைத்து, முடிவுகளை விரைவுபடுத்தி, முன்னோக்கிச் செல்லவே விரும்புகிறோம். நாளை ஜூன் 25. இந்திய ஜனநாயகத்தின் மீது போடப்பட்ட கறை(எமர்ஜென்ஸி)யின் 50 ஆண்டுகளை ஜூன் 25 குறிக்கிறது.
அன்று இந்திய அரசியலமைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. அதனால், இந்த அரசு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, இந்திய ஜனநாயகத்தையும், ஜனநாயக மரபுகளையும் காக்கும். இனி இந்தியாவில் இதுபோன்ற செயலைச் செய்ய யாரும் துணியாதவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை எடுப்போம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88