நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2, 300 ரூபாயும், சன்ன ரகத்திற்கு 2,320 ரூபாயும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பின் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சாதாரண நெல் ரகத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக 105 ரூபாயும்,
சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக 130 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
இந்து சமய அறநிலையத் துறை பெயரை மாற்ற விசிக உறுப்பினர் கோரிக்கை
மேலும் 2025-26 ஆம் நிதி ஆண்டில், சன்னரக நெல் குவிண்டாலுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
.