என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட்; பணி ஓய்வுக்கு ஒருநாள் முன்பு அரசு நடவடிக்கை! | Encounter specialist ADSP velladurai suspended before one day of his retirement

அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்ட்டர், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் பணியற்றியதன் மூலம் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர்பெற்ற ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை, ஒய்வு பெறவிருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரைஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை

ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை

தற்போது, திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றிவரும் வெள்ளதுரை, கடந்த 2013-ல் பணியிலிருந்தபோது காவல்நிலையத்தில் ஏற்பட்ட கைதி மரணத்தில் தொடர்பு இருப்பதாகத் தனக்கெதிராக எழுந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுவருகிறார். இது தொடர்பாகத் விசாரணை ஒருபக்கம் நடந்துவர, மறுபக்கம் வெள்ளதுரை நாளை பணி ஓய்வுபெறவிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு, வெள்ளதுரை ஒய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்பாக இன்று அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. வெள்ளதுரை தொடர்பான சில என்கவுன்டர் வழக்குகள் சிபிசிஐடி-யில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *