“கள்ளச்சாராய மரண எண்ணிக்கை 60-ஐ தாண்டுகிறது… ‘நாற்பதுக்கு நாற்பது’ எனத் தேர்தல் வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு இதுதான் தி.மு.க அரசு செய்த கைமாறா?”
“இந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் அளிக்கும் தகவலின்படி, கள்ளச்சாராய வியாபாரம் ரகசியமாக நடந்திருக்கவில்லை. ஊரறிய பல ஆண்டுகளாக காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அருகிலேயே விமரிசையாக நடந்துவந்திருக்கிறது. எனவே காவல் அதிகாரிகள் அறியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. கள்ளச்சாராயம் தொடர்பான கண்காணிப்பில் குறைபாடு இருந்திருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல… விஷச்சாராய விற்பனை சம்பவங்கள் வேறெங்கும்கூட நடக்கலாம். எனவே உடனடியாக, மதுவிலக்குப் பிரிவை வலுப்படுத்தி விழிப்புடன் செயல்பட்டு அரசு தடுக்க வேண்டும்!”
“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களே.. அவர்களுக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்குமென நம்புகிறீர்களா?”
“பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி தலைவர்கள் அளவில் தெரிந்திருக்கலாம். கிராமங்களில் நடந்தவை அனைத்தும் எம்.எல்.ஏ-க்களுக்கு தெரியும் என கருத முடியாது. அப்படிபார்த்தால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அ.தி.மு.க-வை சேர்ந்த செந்தில்குமார்தான். அதற்கென அவரை குறை சொல்ல முடியுமா? சட்டமன்றமன்றத்தில் போலீஸார் பார்வைக்கு இவ்விவகாரத்தை கொண்டுவந்ததாக சொல்கிறார்கள், அப்படி அவர் சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தரப்பில் அலட்சியப்படுத்தியிருந்தால் அது தவறானதுதான்”
“மதுவிலக்கு கோரிக்கையை வி.சி.க முன்வைக்கிறதே, மதுக்கடைகளை மொத்தமாக மூடிவிட்டால், கள்ளச்சாராய பயன்பாடு இன்னும் பெருகிவிடாதா?”
“மதுக்கடையை மூடினால் கள்ளச்சாராயத்துக்கு மாறிவிடுவார்கள் என்பதும் மலிவான விலையில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதால் வாங்கிக் குடிக்கிறார்கள் என்பதும் எற்றுக் கொள்ள முடியாத தவறான புரிதல்கள். மதுக்கடைகளுக்கு சென்றுகொண்டிருந்தவர்கள்தான் அடுத்தடுத்த வீரியம் வாய்ந்த மதுவைத் தேடி நகரும்போது அது கள்ளச்சாரயத்தில் வந்து நிற்கிறது. எனவேதான் நாங்கள் சொல்லுகிறோம்… ஒருவர் குடிக்க ஆரம்பிக்கும்போதே அதைத் தடுக்க வேண்டும் என்று. ‘கள்ளச் சாராயத்தை ஒழித்தால் போதும் டாஸ்மாக் ஒழிக்க வேண்டாம்’ என கருணாபுரத்தில் ஒருவர் சொல்லிவிட்டால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.”
“வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி விசாரணை திரும்புவதாக புகார் வருகின்றன.. அதையெல்லம் கவனிக்கிறதா வி.சி.க?”
“வேங்கைவயல் விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுகிறோம். யார்மீது சந்தேகம் இருக்கிறதோ அதையெல்லாம் ஊர் மக்களே சிபிசிஐடி தரப்புக்கு சொல்லியிருக்கிறார்கள். அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக போலீஸ் இருப்பதாக ஊர் மக்களின் பேட்டிகளை பார்க்க முடிகிறது. `காவல்துறையின் இமேஜ் சிதைய முதல்வர் அனுமதிக்க கூடாது`. ஒரு பக்கம் மாநில உரிமைகளுக்கு போராடிவிட்டு மறுபக்கம் மாநில உரிமை துஷ்பிரயோக செய்யப்படுவது ஆரோக்கியமானதல்ல. தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள வேண்டும்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88