Tamil News Live Today: `என்னுயிர் இளவல், என் அன்புத்தளபதி விஜய்..!’ – வாழ்த்திய சீமான் | Tamil News Live Today updates dated on 28 06 2024

கட்சி அறிவிப்புக்கு பின் முதல் நிகழ்வு… மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்!

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளிட்ட நடிகர் விஜய், தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நமது இலக்கு 2026 தான் என தெரிவித்த விஜய், நடுவில் அரசியல் கருத்துகளை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்வுகளுக்கு வாழ்த்து சொல்வதுடன் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு போலவே, இந்த வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டும் தொகுதிகள் வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவை இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட நிகழ்வு இன்று சென்னையில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். கட்சி ஆரம்பித்த பின்னர் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இதில் விஜய் பேசப்போகும் கருத்துகள் கவனம் பெறும் என்கிறார்கள். கடந்தாண்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் பேசிய விஜய், பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள், காமராஜர், அம்பேத்கார், பெரியார் ஆகியோர் பற்றி படியுங்கள் எனவும் மேடையில் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது தனது அரசியல் கட்சியையும் அறிவித்துவிட்டதால், முதன்முறையாக அரசியல்வாதியாக ஊக்கத் தொகை வழங்கி பேசவுள்ளார் விஜய். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *