இந்திய ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தமிழகத்தை சேர்ந்த சி.பி.எம் எம்.பி-க்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சந்தித்தனர். அது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பிரச்னைகளையும், தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.


இந்திய ரயில்வேயில் மோதல்கள் உட்பட சமீபத்திய விபத்துகளுக்கு பிற காரணங்களுடன், மனிதத்தவறும் காரணமாக சுட்டிக்காட்டப்படும் நிலையில் லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளை சரிசெய்ய வேண்டிய அவசரத் தேவை எற்பட்டுள்ளது.
பெரும்பாலும் சரக்கு ரயில் லோகோ பைலட்டுகள் ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். 3 அல்லது 4 நாள்கள் கழித்து வீடு திரும்புகிறார்கள், தொடர்ந்து 4 இரவுகளுக்கு மேல் வேலை செய்கிறார்கள், அதன் பிறகும் வாராந்திர ஓய்வு சரியாக வழங்கப்படுவதில்லை.
தலைமையகத்தில் ஓய்வு இல்லாததால், சிவப்பு சிக்னலை கடக்கும் சம்பவத்துக்கும், சிக்னல் செயலிழக்கும்போது செயல்பட வேண்டிய குழப்பமான உத்தரவுகளும் வழிவகுக்கிறது