அதனைத்தொடர்ந்து, கண்களை மூடி நீண்ட நேரம் வழிபாடு செய்த அமித் ஷா அந்தக் கோயில் வாசலில் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம் பகுதியில் தேங்காய் உடைத்து வழிபட்டார். மேலும் தேய்பிறை அஷ்டமியான நேற்று கோட்டை பைரவரை வழிபட்டால் வேண்டிய காரியம் நிறைவேறும்… துன்பம் நீங்கும்… செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல், வழக்கமாக இந்த கோயிலில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வழிபட்டு சென்றால் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது.
இந்நிலையில், அமித் ஷா இங்கே வருகை தந்ததை முன்னிட்டு மூன்று கோயில்களிலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு, அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொண்ட இந்தக் கோயில்களில், அந்நேரம் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோட்டை பைரவர் கோயிலில் அமித் ஷா சாமி தரிசனம் மேற்கொண்ட சுமார் 20 நிமிடம் வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைசியாக, கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட அமித் ஷா அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டார். இங்கிருந்து புறப்பட்ட அவர் கானாடுகாத்தானில் உள்ள கால்நடை துறைக்கு சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற அமித் ஷா அங்கிருந்து திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அன்று தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த அமித் ஷா இந்த கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மழை பெய்ததால், அவரது வருகை ரத்தானது. இந்நிலையில், தற்போது தனது மனைவியோடு வந்து இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88