மேலும், 2022-ம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவம், தற்போது தென் கொரியா வெளியிட்ட “வட கொரியாவின் மனித உரிமைகள் – 2024′ என்ற அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“2020-ல் நிறைவேற்றப்பட்ட பிற்போக்குத்தனமான, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதோடு, கடுமையான தண்டனைகளை வழங்கி மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறச்செய்யாமல் வட கொரியா செய்து கொண்டிருக்கிறது. மேலும், அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் சட்டங்களை இயற்றி, வெளிநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, அப்படி வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றுபவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கின்றனர்.
மேற்கூறிய செயல்பாடுகளின் மூலம் வெளிநாட்டு கலாசார தாக்கங்களைக் குறைக்க இயலும் என்றும், கலாசார நுகர்வு, நாட்டின் கலாசாரத்தை பராமரிக்க வேண்டும் என்கிற நோக்கமே இத்தகைய கட்டுப்பாடுகளுக்குக் காரணம்” என வட கொரியா மீது குற்றம்சாட்டப்படுகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு வட கொரியாவில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவது, மணமகன்கள் மணப்பெண்களை தோலில் சுமந்து செல்வது, சன்கிளாஸ் அணிவது மற்றும் மதுவைக் கண்ணாடிக் குடுவையில் வைத்து அருந்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியாகி, கலாசாரச் சட்டங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிப்படுத்தியதோடு, உலக அளவில் பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.