`மூன்று ஆண்டுகளில் 31,000 பெண்கள் மிஸ்ஸிங்’ – மத்தியப்பிரதேச மாநில் அரசு சொல்வதென்ன?! | More than 31,000 women and girls went missing in Madhya Pradesh

இந்த நிலையில், நேற்று மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலா பச்சன், மத்தியப் பிரதேசத்தில் காணமல் போன பெண்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்தியப்பிரதேச பா.ஜ.க அரசு,“மத்திய பிரதேசத்தில் 2021 – 2024 க்கு இடையில் அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில், 28,857 பெண்கள், 2,944 சிறுமிகள் என மொத்தம் 31,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 பெண்களும் மூன்று சிறுமிகளும் காணாமல் போவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச சட்டமன்றம்மத்தியப் பிரதேச சட்டமன்றம்

மத்தியப் பிரதேச சட்டமன்றம்

ஆனால், இதுவரை பெண்கள் காணாமல் போனதாக வெறும் 724 வழக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உஜ்ஜயினியில் கடந்த 34 மாதங்களில் 676 பெண்கள் காணாமல் போயிருக்கும் நிலையில், ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. சாகர் மாவட்டத்தில் 245 பெண் குழந்தைகளும், இந்தூரில், 2,384 பெண்களும் காணவில்லை. மேலும், இந்தூரில் 479 பெண்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணவில்லை. ஆனால் 15 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *