முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு விசாரணை தீவிரமடைந்துவருகிறது. கைதுக்கு பயந்து சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவரும் விஜயபாஸ்கர், தற்போது கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு முன்பாக அ.தி.மு.க தலைமையிடமும் உதவி கேட்டிருந்தாராம்.
ஆனால், நில மோசடி வழக்கில், விஜயபாஸ்கருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், ‘இதில் தலையிட்டால், கட்சிக்கே கெட்ட பெயர் ஆகிவிடும்’ என்று கருதி, மொத்தமாகக் கைவிரித்துவிட்டதாம் கட்சித் தலைமை. முதலில் கோட்டை மாவட்டத்தில் தஞ்சமடைந்திருந்த விஜயபாஸ்கர், தற்போது என்ன செய்வதென்று தெரியாமல், ஊர் ஊராக ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறாராம்.