திமுக-வினரின் போதைப் பொருள் மற்றும் லாட்டரி விற்பனை குறித்து புகாரளித்ததாலேயே சண்முகம் வெட்டிப் கொலை செய்யப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, சண்முகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், சண்முகத்தின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:
கூடங்குளம் கட்டுமான பணிக்கு நோபள தொழிலாளர்கள்.. உள்ளூர் தொழிலாளர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
இதனிடையே, கொலை வழக்கில், திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனலட்சுமி மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.