நடிகை அதுல்யாவின் பாஸ்போர்ட் திருட்டு.. கேடி வேலை செய்த பணிப்பெண்கள்.. வசமாக சிக்கியது எப்படி?

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன் பின்னர் இவர், ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி தனது வீட்டு வேலைக்காக செல்வி என்பவரை பணியமர்த்தியிருந்தார். அவர் நீண்ட நாட்களாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்தசில மாதங்களாக பீரோவில் வைத்திருந்த பணம் திருடு போவதாக விஜயலட்சுமிக்கு சந்தேகம் எழுந்தது.

விளம்பரம்

ஆனால் விஜயலட்சுமி மற்றும் அதுல்யா ரவி இருவரும் அடிக்கடி சென்னை சென்று வருவதால் இதுகுறித்து கவனிக்க முடியாமல் இருந்து வந்தது.

இதையும் படிக்க:
திரையுலகமே திரண்ட நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு – வைரல் போட்டோஸ்

இந்நிலையில் திருட்டை கண்காணிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். சில நாட்கள் கழித்து சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்த போது அதில் திடுக்கிடும் திருட்டு காட்சிகள் பதிவாகியிருந்தது.

சம்பவத்தன்று பணிப்பெண் செல்வி மற்றும் அவரது தோழி சுபாஷினி இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பீரோவை திறந்த அவர்கள் உள்ளே இருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

பீரோவில் அவர்கள் நினைத்தது போல நிறைய பணம் இல்லை என்பது குறித்து அவர்கள் பேசிக் கொள்ளும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தது. அவர்கள் எப்போதும் அவ்வளவு பணம் வைப்பதில்லை என்றும்., இருக்கும் 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொள்ளலாம், பாஸ்போர்ட்டையும் எடுத்துச் சென்று விட்டால் அவர்கள் தேடி அலையட்டும் என்று அவர்கள் பேசிக் கொண்டதும் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி உடனடியாக வடவள்ளி போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். புகாரின்பேரில் செல்வி மற்றும் அவரது தோழி இருவரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முதலில் பாஸ்போர்ட்டை தாங்கள் எடுக்கவில்லை என கூறி சாதித்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
27 வயதில் ரூ.1000 கோடி சொத்து.. தமிழ் சினிமா நடிகையின் வாரிசு.. யார் தெரியுதா?

ஒரு கட்டத்தில் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்ட செல்வி அச்சத்தில் அதனை கிழித்து வீசி விட்டதாக தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலைக்காக நம்பி வைத்திருந்த பெண்கள் தாங்கள் வீட்டில் இல்லாத போது பணத்தை திருடியதுடன் பாஸ்போர்ட்டையும் திருடி விட்டு நாடகமாடியது வேதனையளிப்பதாக நடிகையின் தாய் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *