UK General Election: `வெற்றியும் பின்னடைவும் தவிர்க்க முடியாதவை ரிஷி சுனக்!’ – ராகுல் | Rishi Sunak | Rahul Gandhi writes to Rishi Sunak, new UK PM Keir Starmer

இங்கிலாந்தில் (Engalnd) தற்போது நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party), ஆட்சியிலிருக்கும் ரிஷி சுனக் (Rishi Sunak) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை (Conservative Party) வீழ்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமாக 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், ஆட்சியமைக்க 326 இடங்கள் போதும் என்ற நிலையில், 412 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது தொழிலாளர் கட்சி. கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்திருக்கிறார். தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவியேற்றிருக்கிறார்.

கியர் ஸ்டார்மர் (Keir Starmer)கியர் ஸ்டார்மர் (Keir Starmer)

கியர் ஸ்டார்மர் (Keir Starmer)

இந்த நிலையில், ராகுல் காந்தி முன்னாள், இந்தாள் என இரண்டு பிரதமர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். புதிய பிரதமர் கியர் ஸ்டார்மர்க்கு எழுதிய கடிதத்தில், “தொழிலாளர் கட்சிக்கும் தனிப்பட்ட ரீதியிலும் உங்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவத்துடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, வலுவான சமூக சேவைகள், சமூக அதிகாரம் மூலம் அனைவருக்கும் சிறந்த வாய்ப்புகள் வழங்குவது என உங்கள் பிரசாரத்தின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *