ஆம்ஸ்ட்ராங்கின் பதைபதைக்கும் கடைசி நிமிடங்கள்.. நேரில் பார்த்த சகோதரர் பகீர் தகவல்

வெறும் 10 வினாடிகளில் அனைத்தும் நடந்துமுடிந்து விட்டதாக ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி கண்ணீருடன் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது அண்ணன் வீரமணி மற்றும் பாலாஜி என்பவர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எப்படி? என்ன நடந்தது என்பது குறித்து அவரது அண்ணன் வீரமணி பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் வீட்டு வேலை நடக்கும் இடத்தில் பாலாஜியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

விளம்பரம்

அப்போது ஆம்ஸ்ட்ராங் அருகில் இருந்த பாலாஜியிடம் உணவு டெலிவரி வந்துள்ளதாக அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறினர். என்ன ஆர்டர் என்று வந்தவர்களிடம் பேசியபோது பாலாஜியை அருகில் இருந்த பள்ளத்தில் அவர்கள் தள்ளி உள்ளனர். பாலாஜியை பள்ளத்தில் தள்ளிவிட்டு ஆர்ம்ஸ்ட்ராங்கை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுகிறார்கள் என்று கூறியப்படி அங்கிருந்தவர்கள் ஓடினார்கள். அதனைக்கேட்டு தம்பியை காப்பாற்றுவதற்காக நானும் ஓடினேன். அப்போது அந்த கும்பல் என்னையும் வெட்டியது. என்னை முதுகிலும் தலையிலும் வெட்டினார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

வெட்டு காயத்துடனே ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்றுவதற்காக சென்று பார்த்தேன். நான் பார்த்தபோது ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அடுத்து சில நிமிடங்களிலே அவர் மயக்கம் அடைந்தார். வீட்டில் கட்டுமான பணி நடைபெற்றதால் அந்த சத்தம் என்று முதலில் நினைத்து விட்டேன்” இவ்வாறு ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *