இன்னொருபக்கம், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோரை பணியிடம் மாற்றி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த அருண் என்பவரை சென்னை காவல் ஆணையராக மாநில உள்துறை நியமித்தது.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றிருக்கிறார். அதோடு, ஆம்ஸ்ட்ராங்கின் படத்துக்கு மலர் தூவி, அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றாவளிகள் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.