கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை, கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் அமைக்கும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி துவங்கப்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி இதே மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
இதேபோல், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:
தாம்பரம் காவல் ஆணையர் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி!!
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரிட் மனுக்கள் மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
.