தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
சென்னையில் நகரின் பிரதான பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, தியாகராயர் நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதே போன்று, கோயம்பேடு, அயனம்பாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், கொளத்தூர் ஆழ்வார்திருநகர், ராமாபுரம் ,வானகரம், திருவேற்காடு, போரூர் ,காரம்பாக்கம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், கோவூர் ,பரணி புத்தூர் ,மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான கொரட்டூர், ஆவடி, அம்பத்தூர், புத்தகரம், அயப்பாக்கம், முகப்பேர், பாடி, மண்ணூர்பேட்டை எஸ்டேட், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழையை காண முடிந்தது. காற்றுடன் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூரில் மிதமான மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் கிழக்கு ராஜ வீதி, கீரைமண்டபம், மூங்கில் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வேலூரில், சத்துவாச்சாரி, காட்பாடி, லத்தேரி, பொன்னை, வள்ளி மலை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேல் கனமழை கொட்டியது.
திருவண்ணாமலையிலும் சோமாசிபாடி, கீழ்பென்னாத்தூர், வேங்கிக்கால், கச்சிராப்பட்டு, ஏந்தல், தண்டராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. பெரம்பலூரிலும் ஆலத்தூர், செட்டிகுளம், குன்னம், அகரம்சீகூர், வேப்பூர் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், வாழக்கரை, திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான வத்திப்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, உலுப்பகுடி பண்ணுவார்பட்டி, பள்ளப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணிநேரத்திற்கு மேல் கனமழை பெய்தது.
கோவை மாநகரில் உக்ககடம், ரயில்நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, கோவிலூர் உள்ளிட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தூத்துக்குடியில் மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
.