Trump: ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; Snipers-ன் உடனடி Action – சில வினாடிகளில் கொல்லப்பட்ட நபர்! | US Ex President Donald Trump gun shot by an person in his election campaign

பின்னர், உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து தற்போது அவர் நலமாக இருக்கிறார். இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரசாரத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் பலியானார். அதேசமயம், சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்றும், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில் வசித்து வந்தார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. மறுபக்கம், பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *