என் மகன் நாட்டுக்காக ஏதோ ஒன்று செய்திருக்கிறான் என்ற பெருமை இருக்கிறது. அதேநேரம் அவர் இப்போது இல்லை என்ற உண்மையும் வலிக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு அரசு பதிலளிக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, துயரத்தின் இந்த நேரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருடன் நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன. ஜம்மு-கஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க ராணுவ வீரர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 32 மாதங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 48 ராணுவ வீரர்கள் மரணமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88