கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்தும், அதன் நிர்வாக இயக்குனர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்கள் வந்தன. “தொழில்துறை நகரமாக புகழப்படும் பெங்களூரில் இப்படி ஒரு சட்டம் செயல்படுத்த முடியுமா’ என இன்ஃபோசிஸின் முன்னாள் CFO மோகன்தாஸ் பாய், கர்நாடக இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீவத்சவா, பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்-ஷா, அசோசேம் இணைத் தலைவர் ஆர்.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, தனது எக்ஸ் தள பதிவை முதலமைச்சர் சித்தராமையா நீக்கினார். மேலும் மசோதா குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில், தொழில்துறையின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைப்பதாக கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தற்போது வரை மசோதா ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. மசோதா மீதான இறுதி முடிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88