NEET Exam: `பிழையை பிழையால் மறைக்கும் முயற்சி’ – இரட்டை அடுக்கு நீட் தேர்வு தகவலும் பின்னணியும்! | govt is considering dividing the NEET into two-tier exam system

அத்தகைய சமவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கி பயணிக்காமல், இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை முழுமையாக பறிப்பதை நோக்கி பயணிப்பது சமூக அநீதி. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீட் அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தரத் தீர்வாக இருக்குமே தவிர, ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்” என கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நீட் தேர்வு குளறுபடிகள் | NEETநீட் தேர்வு குளறுபடிகள் | NEET

நீட் தேர்வு குளறுபடிகள் | NEET

இந்த விவகாரம் குறித்து, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசியபோது, “இரட்டை அடுக்கு நீட் தேர்வு என்பது அவசியமில்லாதது. இதனால் ஏழை கிராமப்புற மாணவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள (எய்ம்ஸ், ஜிம்பர் போன்ற) மருத்துவ இடங்களுக்கு மட்டுமே நடத்தவேண்டும். தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல, +2 தேர்வு முடிவுகளில் அறிவியல் பாடங்களில் குறைந்தபடசம் 60% மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். அரசே தேர்வு மையங்களை உருவாக்கி, தனது முழு கட்டுப்பாட்டில் தேர்வை நடத்த வேண்டும். முக்கியமாக, தனியாருக்குப் பதில் மத்திய மாநில அரசுகளே நீட் தேர்வு பயற்சி மையங்களை இலவசமாக நடத்த வேண்டும். பயிற்சி, உணவு, தங்குமிடம் என சகல வசதிகளையும் மாணவர்களுக்கு இலவசமாக செய்துகொடுக்க வேண்டும்.

டாக்டர் ரவீந்திரநாத் டாக்டர் ரவீந்திரநாத்

டாக்டர் ரவீந்திரநாத்

குறிப்பாக, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கும், எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். தேர்வு எழுத செல்லும் இடங்களுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்க வேண்டும். இவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கொண்டுவரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்தான்; நீட் தேர்வை தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கடிவாளம் போடக்கூடிய ஒன்றாக மாற்றியமைக்கவேண்டும். தவிர, தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைத்தேர்வே கூடாது என்பதுதான் எங்களின் கருத்து!” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *