ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி? கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்..? | Tamilnadu govt online bulding approval- fee details

தேர்வு நிலை மாநகராட்சிகளாக உள்ள ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79; தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 செலுத்த வேண்டும். நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70 கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல், 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70; 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65; 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55; நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டுமானம்கட்டுமானம்

கட்டுமானம்

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், தமிழகத்தில் உள்ள இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும் என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *