`எங்கள் குரலைப் பதிவு செய்ய விரும்புகிறோம்!’ – நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்த மம்தா | We want to record our voice, west bengal CM Mamata banerjee confirms she will attend niti aayog meeting

இந்த நிலையில், தங்களின் குரலைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

நாளை தொடங்கும் இந்தக் கூட்டத்துக்காக டெல்லிக்கு இன்று புறப்படுகையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டை நிதி ஆயோக் கூட்டத்தில் எதிர்ப்பேன். பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் அணுகுமுறை மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்தும் வகையில் இருக்கிறது.

மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அவர்கள் பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதோடு, எங்கள் குரலைப் பதிவுசெய்ய விரும்புகிறோம். அதற்காக, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பேன். தேவைப்பட்டால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்வேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *