Niti Aayog: `மைக்கை அணைத்துவிட்டனர்… 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை!’ – மம்தா வெளிநடப்பு | west bengal CM mamata banerjee walk out from niti aayog for not allow to speak

மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாயன்று தாக்கல்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 27-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்ளும் வகையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள் ஸ்டாலின், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான், சுக்விந்தர் சிங் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

நிதி ஆயோக்நிதி ஆயோக்

நிதி ஆயோக்

அதேசமயம், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்க்கவும், தங்களின் குரலைப் பதிவுசெய்யவும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று காலையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டமும் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *