ரோந்து கப்பல் மோதி, உயிரிழந்த தமிழக மீனவர் – மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணமா? | Sri Lankan Navy hit and kills Tamil fishermen! -is government dealing on a soft handle?

மத்திய அரசின் கண்துடைப்பு கண்டனம்?!

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி வெளிவிவகார அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமான உயிரிழப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினோம். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் இரு அரசுகளுக்கும் இடையே நிலவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதுபோன்று மீண்டும் மீண்டும் நிகழாமல், பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பிற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து இலங்கை அரசிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்!” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு செய்திக்குறிப்பு மத்திய அரசு செய்திக்குறிப்பு

மத்திய அரசு செய்திக்குறிப்பு

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், “மீனவர் கைது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்திய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். தற்போது இலங்கையில் 83 தமிழக மீனவர்கள் நீதிமன்றக் காவலில் இருக்கின்றனர். மேலும் 169 மீன்பிடி விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றன” எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *