அதிமுக: 11 தொகுதிகளில் பரிதாப நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி! | AIADMK lags behind in 11 constituencies

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தேமுதிக மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதன்படி, 11 தொகுதிகளில் அதிமுக, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக-வுக்கு பல இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சிக்கலை ஏற்படுத்தி உள்ளார்கள்.

வேலுமணி, சிங்கை ராமச்சந்திரன்வேலுமணி, சிங்கை ராமச்சந்திரன்

வேலுமணி, சிங்கை ராமச்சந்திரன்

அதாவது, தென்சென்னையில் ஜெய்வர்தன், வேலூர் பசுபதி, தர்மபுரி அசோகன், நீலகிரி லோகேஷ், கோவை சிங்கை ராமசந்திரன், தேனி நாராயணசாமி, மதுரை சரவணன், ராமநாதபுரம் ஜெயபெருமாள், கன்னியாகுமரி பசிலியான் நசரேத் ஆகிய 9 தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். அதேபோல, புதுச்சேரியில் தமிழ்வேந்தன், நெல்லையில் ஜான்சி ராணி ஆகியோர் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.

தளவாய் சுந்தரம், பசிலியான் நசரேத், எடப்பாடி பழனிசாமிதளவாய் சுந்தரம், பசிலியான் நசரேத், எடப்பாடி பழனிசாமி

தளவாய் சுந்தரம், பசிலியான் நசரேத், எடப்பாடி பழனிசாமி

விளவங்கோடு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர் ராணி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த மூன்று தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி பிடித்து இருக்கிறது. அதேபோல, மத்திய சென்னையில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *