Odisha: ஒடிசாவில் பின்தங்கிய நவீன் பட்நாயக்… முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் பாஜக! | Odisha Assembly Election 2024 results

கூடவே, பூரி ஜெகந்நாத் கோயில் கருவூல அறையின் காணாமல் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாகவும், நவீன் பட்நாயக்கின் உடல்நலம் மோசமானதில் சதி இருப்பதாகவும் பா.ஜ.க பிரசாரம் செய்துவந்தது. மறுபக்கம், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என்று வெளிப்படையாகக் கூறிய நவீன் பட்நாயக், தன்னுடைய உடல்நலம் குறித்து 10 ஆண்டுகளாக பா.ஜ.க வதந்தி பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.

இப்படியாக ஒடிசாவில் தேர்தல் களம் நிறைவடைந்த நிலையில், ஒடிசாவில் 24 வருட நவீன் பட்நாயக் ஆட்சியே தொடருமா அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்புடன் இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே முன்னிலையிலிருந்த பாஜக கூட்டனி தற்போது, மொத்தமுள்ள 147 இடங்களில் 80 இடங்களில் முன்னிலை வகிக்க 48 இடங்களுடன் ஆளும் பிஜு ஜனதா தளம் பின்தங்கியிருக்கிறது. இதன்மூலம், பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இவை தவிர காங்கிரஸ் 15 இடங்களுடன் முன்னிலையில் இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *