தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் முதல் தெருவின் முகப்பிலே, பராமரிப்பு இல்லாமல் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. கிணறு இருப்பதே தெரியாதவாறு குப்பையால் மூடப்பட்ட நிலையில் குப்பைக்கிடங்காக காட்சி அளிக்கிறது அப்பகுதி. கிணற்றின் முன்பே நின்று கொண்டு “இங்க இருந்த கிணத்த காணோம்” னு தேடும் நிலையில் இருந்தது மாநகராட்சியை சேர்ந்த குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட பொதுக்கிணறு.
அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் பேசிய போது, கிணற்றை சரிவர பராமரிக்காததால் அங்கு நடந்த, நடந்துகொண்டு இருக்கும் ஆடு மாடுகளின் உயிரிழப்பை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பல ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கிணறு, தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக உரிய பராமரிப்பு இல்லாததால் அச்சுறுத்தலாக மாறி உள்ளது அப்பகுதியினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுகள் கடந்தும் கிணற்றை மாநகராட்சி எந்த நடவடிக்கை எடுத்தும் சீர் செய்யவில்லை என்றும், பல கால்நடைகள் இந்த கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்ததையும் அப்பகுதியினர் கவலையோடு தெரிவித்தனர்.
பல வருடங்களுக்கு முன், குடிநீருக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட்ட கிணறு, இன்று குப்பைகளால் நிரம்பி குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாறியுள்ள அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
கிணற்றுக்கு நேர் எதிரே மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கும் இந்த கிணற்றின் பராமரிப்பற்ற நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
பராமரிப்பு இல்லாமல் அச்சுறுத்தலாக உள்ள கிணற்றைப் பற்றி பல புகார்களும் கோரிக்கைகளும் அப்பகுதியினர் வைத்தும் மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் அப்பகுதியினர் வருத்தம் தெரிவித்தனர்.
சாலையில் நடமாடும் எவருக்கும் இந்த கிணற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என அப்பகுதி மக்கள் நம்மிடம் கோரிக்கையும் வைத்தனர்.
காலநடைகள் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க மற்றும் எந்த உயிரையும் பாதிப்புக்கு உள்ளாக்காமல் இருக்க இயன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி இயன்றளவு விரைவில் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88