Vinesh Phogat: `மோடி பாரீஸிலிருக்கும் பி.டி.உஷாவிடம் பேசினார்.!’ – மக்களவையில் அமைச்சர் கூறியதென்ன?

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat), இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்ததால் இறுதிப் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், எந்தப் பதக்கமும் கிடைக்காமல் போனது.

Vinesh Phogat

இத்தகைய அதிர்ச்சிகர சம்பவத்தைத் தொடர்ந்து, பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி, “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். இந்தியாவின் பெருமை நீங்கள். மேலும், ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் இன்ஸ்பிரேஷன். இன்றைய பின்னடைவு வேதனையளிக்கிறது. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. எனவே, பலத்துடன் திரும்பிவாருங்கள். உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்” என்று ட்வீட் செய்து வினேஷ் போகத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். இன்னும் சிலர், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் மேல்முறையீடு செய்யவேண்டும் எனக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மக்களவையில் தற்போது பேசியிருக்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “வினேஷ் போகத்தின் எடை 50 கிலோ 100 கிராம் என்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கம், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தத்த (UWW) அமைப்பிடம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மேலும், பிரதமர் மோடி பாரிஸிலிருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவிடம் இந்த சம்பவம் குறித்து பேசினார். அதோடு, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

பி.டி.உஷா

மேலும் பி.டி.உஷா, “வினேஷ் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒலிம்பிக் கிராம பாலிகிளினிக்கில் (Olympic village polyclinic) வினேஷை சந்தித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு மற்றும் முழு நாடும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். மருத்துவ மற்றும் மன ரீதியான அனைத்து ஆதரவையும் அவருக்கு வழங்குகிறோம்” என்று பாரிஸிலிருந்து தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *