தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புகளுக்கு (B.Sc (Computing Desgining) B.Com.BCA & BBA ) விண்ணப்பிக்கலாம்.
HCL Techbee “Early Career Programme” மூலமாக பன்னிரண்டாம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies ஒரு வருடகால பயிற்சி அளிக்கிறது.மேலும் நிரந்தர வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டபடிப்புகளில் சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படுகிறது.
தகுதிகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளாக இருக்க வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இதையும் வாசிக்க : டபுள் டக்கர் பஸ் : நம்ம மாமதுரை திருவிழாவிற்கு வரப்போகுது…முழு விவரம் இதோ..!!
ஊதியம்: ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ.22,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.
பதிவு செய்யும் முறை: இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
**மேலும் விபரங்களுக்கு:**மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம் 2-வது தளம் தென்காசி. என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் 04633-214487 மற்றும் அலைபேசி எண்-74488 28513 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.