சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக இரண்டு இடங்களில் ஆய்வு நடைபெறுகிறது.
சென்னையில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் முதல் பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமைய உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
இந்தநிலையில் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. அதன்படி புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
.
- First Published :