யூ.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி, கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். ரவி, “ஆட்சிப் பணியாளர்களாகிய அனைவரும் அதிகாரத்துவமின்றி சேவை மனப்பான்மையுடன் நம் நாட்டை கட்டமைக்க வேண்டும். 1976-ம் ஆண்டு, நான் இந்தியக் காவல் பணியாளராக (IPS) தேர்ச்சி பெற்றபோது, அதிகாரிகள் அனைவரும் உயரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் போன்ற அதிகாரத்துடனும் நடந்து கொண்டனர். தற்போது அந்த நிலை மாறி நாட்டின், அனைத்து மட்டத்திலிருந்தும் மாணவர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களால் மட்டுமே சமூகப் பிரச்னைகளை புரிந்துகொள்ளவும் முடியும்.
வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் வெற்றியைத் தலைக்கு ஏற்றிடாமல் அடக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த வெற்றிக்குப் பின் கண்களுக்குத் தென்பட்டும், படாமலும் பல பேரின் உழைப்பு இருக்கும். மேலும், உடல்நலம், அறிவு மற்றும் ஆன்மிகத்தின் வளர்ச்சியில் ஆட்சிப் பணியாளர்களாகிய அனைவரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.” என்றவர்,