மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா பிளவு பட்டபோது பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவினர். உத்தவ் தாக்கரேயின் கட்சி சின்னம், பெயர் போன்றவற்றையும் ஏக்நாத் ஷிண்டே அணி பறித்துக்கொண்டது. இதனால் புதிய கட்சி, புதிய சின்னத்துடன் உத்தவ் தாக்கரே நடந்து முடிந்த தேர்தலை சந்தித்தார். அதோடு போதிய நிதி இல்லாமலும், கட்சி அலுவலகம்கூட இல்லாமல் உத்தவ் தாக்கரே கடும் நெருக்கடிக்கு ஆளானார். ஆனால் மக்கள் உத்தவ் தாக்கரே பக்கம் நின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இருக்கும் எம்.பி-க்கள் சிலரிடம் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில எம்.பி-க்கள் உத்தவ் தாக்கரேயை தொடர்பு கொண்டு பேசி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-06/b9127bd4-55c1-4d40-a864-434c58c9dd5a/eknath-shinde-the-dark-horse-is-now-here-for-the-long-haul.jpg)
அவர்கள் மீண்டும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். எத்தனை எம்.பி-க்கள் உத்தவ் தாக்கரேயை தொடர்புகொண்டு பேசினர் என்ற தகவல் இல்லை. ஆனாலும் வரும் நாள்களில் ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் உத்தவ் தாக்கரேயிடம் வர வாய்ப்பு இருக்கிறது என்று உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருக்கிறது.
இத்தேர்தலுக்கு முன்பு அதிகப்படியான அணி மாற்றம் இருக்கும் என்று உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். கட்சியில் இருந்து சென்றவர்களை உத்தவ் தாக்கரே துரோகிகள் என்று விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருப்பதால், எதற்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-06/f9835546-3190-4ee6-a336-3910971f2ebc/eknath-shinde-the-dark-horse-is-now-here-for-the-long-haul.jpg)
ஏக்நாத் ஷிண்டே அணியில் தற்போது மும்பை வடமேற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ரவீந்திர வாய்க்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கமானவராகவே இருந்தார். தேர்தலையொட்டித்தான் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்து வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் உத்தவ் தாக்கரே அணிக்கு வர ஆர்வமாக இருப்பதாக, தாக்கரே தரப்பினர் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb