கொல்கத்தா: தேசத்தை உலுக்கிய பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலை… விசாரணையின் நிலை என்ன?! | Junior doctors and others are summoned for enquiry regarding women doctor rape and murder case in kolkata

மேலும், ‘பெண் மருத்துவரின் கழுத்து நெரித்து, அந்த நபர் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது’ என்றும் போலீஸார் கூறுகிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உடனடியாக மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மருத்துவர்கள் போராட்டம்மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம்

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, ஜி.ஆர்.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ‘பெண் மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை சந்தீப் கோஷ் அழித்துவிட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராடிவரும் மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *