`உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு; பட்டியல் சமூகத்தை பல்வேறு குழுக்களாக பிரிக்கும்’ – திருமாவளவன் விளக்கம்! | VCK agitates over Supreme court Verdict on sub quota on Sc st reservation

ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.கஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.க

ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.க
நரேஷ்குமார்.வெ

தொடர்ந்து பேசியவர், “பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

இத்தீர்ப்பை எதிர்ப்பதனால், பல தரப்பினர் வி.சி.க-வை எதிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய திருமாவளவன், “சமூகநீதி குறித்தும் ஜனநாயகம் குறித்தும் வி.சி.க-வுக்கு யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதினால் சாதி அமைப்புகள் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் வழங்குவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள்” என்றார்.

ஆர்ப்பாட்ட நிகழ்வில் வி.சி.க பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *