“செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் கிடைப்பது உறுதி. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது என்பதுதான் தலைமைக்கு வந்த தகவல்.” எனப் பேச்சைத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர். “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறது தலைமை. அவர் வசமிருந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றை மீண்டும் அவர் வசம் ஒப்படைக்கும் எண்ணத்தில் இருக்கிறது தலைமை. ஜாமீன் கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை. மணீஷ் சிசோடியா வழக்கை மேற்கோள் காட்டியும் அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்பதையும் மையமிட்டே செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதையொட்டி நீதிமன்றமும் அமலாக்கத்துறைக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. செந்தில் பாலாஜி வழக்கை விசாரணை செய்து வரும் அபய் எஸ்.ஓகா ஆகஸ்ட் 13-ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய போது ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றங்களுக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்.
அதில், `அரசுத்தரப்பு ஒருவர் மீது எவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகளையும் வைக்கலாம். ஆனால், சட்டத்துக்கு உட்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதுதான் நீதிமன்றத்தின் கடமையாக இருக்க வேண்டும். ‘ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விதி முறை; சிறைக்கு அனுப்புவது என்பது விதி விலக்கு’ என்பதுதான் சட்ட தத்துவம். இந்தத் தத்துவம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் ஆகிய சிறப்பு சிறப்பு சட்டங்களுக்கு உட்பட்ட குற்றச்செயல்களுக்கும் பொருந்தும். ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டால், ஜாமீன் வழங்கத் தயக்கம் காட்டவோ, மறுக்கவோ கூடாது. தகுதியான நபர்களுக்கு ஜாமீன் மறுப்பது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வலியுறுத்தும் வாழும் உரிமைக்கு எதிரான செயல்’ எனச் சொல்லியிருக்கிறார். எனவே, விசாரணைகள் முடிவுக்கு வந்தால் நீதிமன்றம் உறுதியாக ஜாமீன் வழங்கிவிடும் என்பது உறுதியாகிறது” என முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88