முன்னாள் முதல்வர் ஃபரூப் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, முன்னாள் முதல்வர் மகபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து குப்கார் கூட்டணி என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தின. அவர்கள் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டு 110 இடங்களில் ஜெயித்தார்கள். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்தக் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மக்களவைத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லாவின் கட்சியும், மகபூபா முஃப்தியின் கட்சியும் எதிரெதிராகப் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை பா.ஜ.க-வுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக குப்கார் கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் யூசுப் தாரிகாமி ஈடுபட்டிருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தில் மக்களின் அதிருப்தியும், ஜம்மு-வில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கமும் பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனினும் கூட்டணி அமைவது குறித்த இறுதி முடிவுகளின் அடிப்படையிலே உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88