முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் காக்கி நிற பேண்ட் அணிய வேண்டிய காரணம் என்ன என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மின்வாரிய தலைமையகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மின்சாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டிய அரசு, மின் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இன்னும் 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு ஒரு காலம் வரும் என்றும் அப்போது கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 100 ரூபாய் நாணயத்திற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காததுக்கு கேள்வி எழுப்பாதது ஏன்? திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை.
வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். நேற்று பேண்ட் பேட்டிருந்த முதலமைச்சர் காக்கி நிற பேண்ட் போட காரணம் என்ன. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தலித் மக்கள் முதல்வராகலாம்.
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள். நாம் தமிழர் நிர்வாகி மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை கைது செய்திருக்கிறது. தவறு யார் செய்தாலும் தவறு.
100 ரூபாய் நாணயம் வெளியிட்டால் பல்இலிப்பு இதுதான் பாசிச எதிர்ப்பு. நேற்று வெளியிட்ட கலைஞர் நூற்றாண்டு 100ரூபாய் நாணயம் செல்லாக்காசு. அதைப்ற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் கூட ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம். இவ்வாறு சீமான் கூறினார்.
.