`தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றமா?' – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவிருக்கிறது என்றும், இன்று மாலை அறிவிப்பு வெளிவருகிறது என்றும் தகவல் வெளியானது. மேலும், மூத்த அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, மூன்று புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகவும், இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையில், நாணய வெளியீட்டு விழாவை மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலினும், மாநில அரசுதான் நடத்தியது என மத்திய அமைச்சர் எல்.முருகனும் பேசியிருந்தனர்.

ஸ்டாலின் – ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மாநில பேரிடர் கட்டுப்பாட்டு நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், “இந்த தரம் உயர்த்தப்பட்ட பேரிடர் கட்டுப்பாட்டு வாரியம் பெரும் பலனை தரும். தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக இந்த திட்டம் கொண்டுசெல்லப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிகழ்ச்சியை (கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா) தமிழக அரசு நடத்தியது. அமெரிக்கப் பயணம் முடிந்தப் பிறகு என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்களைச் சந்திப்போம். அமைச்சரவையில் மாற்றம் குறித்த தகவல் இன்னும் எனக்கு வரவில்லை” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *