`எதையும் அரைகுறையாக செய்யக் கூடாதென்பார்’- ஜனநாயக கட்சி மாநாட்டில் அம்மாவை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ் | kamala Harris Leans on Memory of Her Mother on democratic event

ஆனால் என் அம்மா ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் கடினமானவர், தைரியமானவர், பெண்களுக்கான போராட்டத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார். எனக்கும் மாயாவுக்கும், “அநீதியைப் பார்த்து பயப்படாமல், அதை எதிர்த்து ஏதாவது செய்யுங்கள்’ எனப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் அப்பா சிரித்துக்கொண்டே ‘ஓடு கமலா ஓடு, எதற்கும் பயப்படாதே’ எனக் கூறுவார். அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துகிறேன்.

கமலா ஹாரிஸ் - அம்மா ஷியாமலா கோபாலன்கமலா ஹாரிஸ் - அம்மா ஷியாமலா கோபாலன்

கமலா ஹாரிஸ் – அம்மா ஷியாமலா கோபாலன்

மக்கள் சார்பாகவும், ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும், எங்கள் கட்சி, என் அம்மாவின் சார்பாகவும், சாத்தியமற்ற பயணத்தை மேற்கொண்ட அனைவரின் சார்பாகவும், நான் வளர்ந்ததைப் போல வளர்ந்த மனிதர்கள் சார்பாகவும், தங்கள் கனவுகளைத் துரத்த கடினமாக உழைக்கும் மக்கள் சார்பாகவும், அனைவரின் சார்பாகவும், அமெரிக்காவுக்கான உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது முழு வாழ்க்கையிலும் எனக்கு ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே. அவர்கள் தான் மக்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *