`மோதல்கள் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன..!’ – உக்ரைனில் பிரதமர் மோடி | Conflict is particularly devastating for young children, PM modi said in ukraine

இது குறித்து ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மோடியும் நானும் மரியாதை செலுத்தினோம். ஒவ்வொரு நாட்டிலும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழத் தகுதியுடையவர்கள். அதை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

மேலும், இது குறித்து மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `மோதல்கள் குழந்தைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நேரத்தில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களிடம் என் இதயம் செல்கிறது. அவர்களுக்கு, இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வலிமை கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

அங்கிருந்து இருவரும் கிளம்பியதையடுத்து, உக்ரைன் அதிபர் மாளிகையில் மோடியை ஜெலன்ஸ்கி வரவேற்றார். அங்கு, இரு தரப்பினரின் பேச்சுவார்த்தையில் வேளாண்மை, மருத்துவம், கலாசாரம், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றில் இந்தியா – உக்ரைன் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *