Siddique: பாலியல் கொடுமை குற்றச்சாட்டு முன்வைத்த நடிகை; AMMA பதவியிலிருந்து நடிகர் சித்திக் ராஜினாமாமகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் நடக்க இருந்த நிலையில், இப்போது அது நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மகாராஷ்டிரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தன்னை பா.ஜ.க கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் இப்போது பா.ஜ.க கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஷிண்டே) கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. இதனால் கூட்டணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்ட ராஜ் தாக்கரே, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “‘மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
பத்லாப்பூரில் நடந்தது கொடூரமானது மற்றும் துரதிஷ்டவசமானது. மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, மானபங்கம், வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2023-ம் ஆண்டில் மட்டும் 7 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். புகார் செய்யப்படாத குற்றம் அதிகமாக இருக்கிறது. பீட் மற்றும் சாங்கிலி மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பெண் தொழிலாளர்களின் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம் இப்போது மட்டுமல்ல மகாவிகாஷ் அகாடி அரசு ஆட்சியில் இருந்தபோதும் நடந்தது. ஆனால் இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு போலீஸாரை குற்றம் சொல்ல மாட்டேன்.
அரசுதான் இதற்கு காரணம் என்று சொல்வேன். போலீஸார் முக்கியமான நேரத்தில் ஆளுங்கட்சியின் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்று காட்டுகிறேன். மோசமான எண்ணத்தோடு யாரும் பெண்களை பார்க்க முடியாதபடி செய்கிறேன். சாதி அரசியலையும், கட்சி பிரிவினைகளையும் சரத் பவார் தான் மகாராஷ்டிராவிற்கு கொண்டு வந்தார். இப்போது அது விஷமாக ஆழமாக பரவி இருக்கிறது” என்றார்.