திமுக: சரிந்த வாக்குகள்; அறிவாலயத்தின் அருப்புக்கோட்டை விசாரணை! | dmk arivalayam starts enquire on minister kkssr constituency what happened

நடந்து முடிந்த தேர்தலில், சட்டமன்றத் தொகுதிவாரியாக மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் விவரம் சமீபத்தில் வெளியானது. அதில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் பதிவான 1,53,477 வாக்குகளில், 49,381 வாக்குகளே பெற்றிருக்கிறார் மாணிக்கம் தாகூர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அருப்புக்கோட்டையில் 91,040 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அதனோடு ஒப்பிடுகையில், இந்தமுறை அருப்புக்கோட்டையில் சுமார் 41,000 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார் மாணிக்கம் தாகூர். தன்னுடைய வெற்றிக்காக காட்டிய முனைப்பை, மாணிக்கம் தாகூரின் வெற்றிக்காக அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் காட்டவில்லை என்கிற முணுமுணுப்பு கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் வரும் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனால், அருப்புக்கோட்டையில் சறுக்கிய அளவுக்கு குறையவில்லை. “அமைச்சராக இருந்துகொண்டு, தன்னுடைய தொகுதியில் கோட்டைவிட்டுவிட்டாரே…’ என்கிற வருத்தம்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது சீனியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 6-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களும் தொகுதிப் பொறுப்பாளர்களும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, தென்காசியில் வென்ற ராணி ஶ்ரீகுமாருடன் முதல்வரைச் சந்தித்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அவரிடம் கட்சி சீனியர்கள் பலரும் பெரிதாக முகம் கொடுத்துப் பேசவில்லை. முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றுவிட்டுப் புறப்பட்டுவிட்டார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

அருப்புக்கோட்டையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சறுக்கியதுபோல, எந்தெந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களெல்லாம் தங்கள் தொகுதியில் சறுக்கியிருக்கிறார்கள் என்கிற விவரங்களை எடுக்கத் தொடங்கிவிட்டது அறிவாலயம். அந்த ரிப்போர்ட், விரைவிலேயே முதல்வரின் பார்வைக்குச் செல்லவிருக்கிறது. சொந்தத் தொகுதியிலேயே கோட்டைவிட்டவர்களுக்கு விரைவிலேயே மண்டகப்படி நடக்கலாம்” என்றனர் விரிவாகவே.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *