அக்னி வீரர்கள் திட்டத்தை நிதிஷ் குமார் ஏன் எதிர்க்கிறார்? ‘அக்னிவீரர்கள் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, ராணுவத்தினர் மத்தியிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களின் குடும்பத்தினர் தேர்தலில் தங்கள் எதிர்ப்பை காண்பித்திருக்கிறார்கள். எனவே, இது குறித்து பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது’ என்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதில் அக்னிவீரர்கள் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிதிஷ் குமாருக்கு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நிதிஷ் குமார் இருக்கிறார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஆட்சியில் மோடி அரசு இந்த திட்டத்தை கொண்டு வர காட்டிய தீவிரம், இந்த மோடி 3.O-விலும் நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88