பாஜக கூட்டணி அரசில் யார் யாருக்கு அமைச்சர் பதவி? 15க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு

பாஜக கூட்டணி அரசில் அமைச்சர்களாக பதவியேற்க அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி,  உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடியுடன் புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளது. இந்தநிலையில், மத்திய அமைச்சர்களாக பதவியேற்க பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பாஜக மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்

பாஜகவை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலத் ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால், சபர்பானந்தா சோனாவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த எம்.எல்.கட்டார், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி, லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான் ஆகியோருக்கும் மத்திய அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மசனி, ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்நாத் தாகூர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லல்லன் சிங், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் சவுத்ரி, ஷிண்டே பிரிவு சிவசேனாவின் பிரதாப் ராவ் ஜாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:  
மோடி புதிய அமைச்சரவையில் ஆந்திராவுக்கு 5 அமைச்சர்கள்… யார் யார் தெரியுமா?

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *