Sagar Eshwar: தந்தை தோல்விக்கு பழிதீர்த்த மகன் – யார் இந்த 26 வயது இளம் எம்பி சாகர் ஈஷ்வர் காந்த்ரே? | Sagar Eshwar Khandre, a 26-year-old MP from Karnataka

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், கர்நாடகாவின் 28 இடங்களில் பா.ஜ.க 17 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. ஜனதா தளம் (மதச்சார்பற்ற) இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கர்நாடகாவின் பிதார் மக்களவைத் தொகுதியிலில் போட்டியிட்ட காங்கிரஸின் 26 வயது இளம் வேட்பாளர் சாகர் ஈஷ்வர் காந்த்ரே, இரண்டு முறை பா.ஜ.க எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பக்வந்த் குபாவை தோற்கடித்து வெற்றிப்பெற்றிருக்கிறார்.

ஈஷ்வர் காந்த்ரே - மல்லிகார்ஜுன கார்கேசாகர் - ஈஷ்வர் காந்த்ரேஈஷ்வர் காந்த்ரே - மல்லிகார்ஜுன கார்கேசாகர் - ஈஷ்வர் காந்த்ரே

ஈஷ்வர் காந்த்ரே – மல்லிகார்ஜுன கார்கேசாகர் – ஈஷ்வர் காந்த்ரே

இவர் 2019 மக்களவைத் தேர்தலில் 1,16,834 வாக்குகள் வித்தியாசத்தில் பக்வந்த் குபா-விடம் தோல்வியை தழுவிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரேவின் மகன். இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாகர் ஈஷ்வர் காந்த்ரே,“இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கினால் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். எனவே மாணவர்களுக்கு திறன் மேம்பாடு செய்வதே முதல் திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *