தொடர்ந்து பேசியவர்கள், “பிரசாரத்தின்போது மைக் சின்னத்தை ஒலிவாங்கி எனச் சொல்ல முடியாமல் ஆங்கிலத்தில் மைக் எனச் சொல்வதை கட்சியினர் துளியும் விரும்பவில்லை” என்கிறார்கள்.
கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, “கரும்பு விவசாயி சின்னம் கொள்கைக்கு நெருக்கமானதுதான். ஆனால் அங்கீகாரம் பெற உதவிய சின்னம் `மைக்’தான். மேலும் இருபதே நாளில் தமிழ்நாடு முழுக்க மைக் சின்னம் சென்று சேர்ந்திருப்பதால் அதுவே ஒரு அடையாளம்தான். மேலும் வரைவதற்கும் பேச்சு வழக்கில் கொண்டு சேர்ப்பதற்கும் மைக் சின்னம் மிக எளிதாக இருக்கும். எனவே பறிபோன கரும்பு விவசாயி சின்னத்தைவிட வெற்றியை தேடிதந்த மைக் சின்னமே இருக்கட்டும் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவுகிறது. இறுதி முடிவை அண்ணன் சீமான்தான் எடுப்பார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88