இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சத்திய மூர்த்தி பவன் சீனியர்கள், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். அந்தநேரத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்படுமென எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு இளங்கோவன்தான் சீனியர். அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்த காலத்தில் சட்டசபைக்குள் வந்தாலே என்ன பேசப்போகிறார் என்கிற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஆனால் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஆசியும், தி.மு.க-வின் சிபாரிசும் இருந்ததால் அந்த பதவியை செல்வப்பெருந்தகை கைப்பற்றினார். தற்போது மாநில தலைவராகவும் ஆகிவிட்டார். மேலும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு சென்றது.
இந்தச் சூழலில்தான், `தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்” என செல்வப்பெருந்தகை பேசி வருகிறார். இதற்கு, `காமராஜர் ஆட்சியை ஸ்டாலின் தருகிறார்’ என இளங்கோவன் பதிலடி கொடுக்கிறார். இதன் மூலம் எந்த தி.மு.க செல்வாக்கை வைத்து பதவிகளை பிடித்தாரோ, அவர்களுக்கு எதிராக செல்வப்பெருந்தகையை திருப்பிவிட முயற்சிக்கிறார் இளங்கோவன். இதன் மூலம் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். வரும் காலங்களில் இந்த மோதல் அடுத்த கட்டத்தை எட்டும். அப்போது இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ தெரியவில்லை?” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb