ஜி 7 மாநாடு… இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அண்மையில் பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.